 
     
                        
                    “சிறுதானியம் மற்றும் பயறு வகைகளை உண்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க முடியும்.”
Date:08.07.2025 Day: Tuesday Event Name: 3 – 5 Category Tamil Activity3
தலைப்பு : “ஆரோக்கியமே ஆனந்தம்”
“சிறுதானியம் மற்றும் பயறு வகைகளை உண்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க முடியும்.”
ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஆரோக்கியமே ஆனந்தம் என்ற தலைப்பில் பல்வேறு வகையான உணவுப் பொருட்களைக் காட்சிப்படுத்தி அவற்றின் பயன்களை விளக்கினார்கள்.
வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மாணவர்கள் பல்வேறு வகையான சிறு தானியங்கள் மற்றும் சிறுதானியத்தில் செய்த உணவுப் பொருட்களைக் காட்சிப்படுத்தினர்.
இவ்வாறாக ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் போது பல்வேறு நோய்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். சிறு தானிய உணவுகளை உண்ணும் போது மலச்சிக்கல் நீங்குகிறது.மூளைத் திறன் வளர்கிறது. உடல் எடை பராமரிக்கப்படுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலில் சர்க்கரை அளவை பராமரிக்கிறது என்பதை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
2023 senthil public school Krishnagiri. all rights reserved. designed by aatmia.