Activity - 1 தேதி : 14.08.2026 கவிதைப் போட்டி நாள் : வெள்ளி 1. தியாகத்தின் பாதையில் சுதந்திரம். 2.செந்நீரில் மலர்ந்த சுதந்திர ஆகஸ்ட். 3.சுதந்திரக் காற்றில் ஒரு தேசிய கீதம் மனதின் மௌனத்தை வார்த்தைகளாக்கும் வித்தை கவிதை என்ற வரிகளுக்கு ஏற்ப மாணவர்களின் சிந்தனையையும் தமிழின் ஆர்வத்தை ஏற்படுத்த நடத்தப்-பட்ட போட்டியே கவிதைப் போட்டி. மாணவர்கள் தமிழ்மொழியின் மீதுள்ள ஆர்வத்தை வெளிக்காட்டும் விதமாக எண்ணற்ற மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். மாணவர்களுக்குக் கவிதைப் போட்டி தாவரவியல் ஆய்வகத்தில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ் மன்றச் செயலாளர் வரவேற்புரையாற்றி அனைவரையும் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, நடுவர் குழுவினர் போட்டிக்கான விதிமுறைகளையும், கால அளவையும் பங்கேற்பாளர்களுக்கு விளக்கிக் கூறினர். மாணவர்கள் தமது கவிதைத் திறனையும், நாட்டுப்பற்றையும் வெளிப்படுத்தும் வகையில் மிகச் சிறப்பான கவிதைகளை படைத்தனர். மாணவர்கள் எழுதிய கவிதைகளை நடுவர் குழுவினர் வாசித்து, கவிதையின் நடை, தரம் மற்றும் கருத்துச் செழுமை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்தனர். தமிழின் சிறப்பையும் ஒற்றுமையையும் போற்றும் வகையில் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
2023 senthil public school Krishnagiri. all rights reserved. designed by aatmia.